இலத்திரனியல் சிகரட்களுக்கு தடை விதித்த ஆஸ்திரேலிய அரசு
#Australia
#government
#Ban
#Ciggerette
Prasu
2 years ago
இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இ-சிகரெட்டுகளுக்கு தடை விதிக்க போவதாக ஆஸ்திரேலியா அரசு அறிவித்துள்ளது.
புகைப் பழக்கத்திலிருந்து விடுவிக்கும் என விளம்பரப்படுத்தப்பட்ட இ-சிகரெட்டுகளில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் புற்றுநோய், சுவாசக் கோளாறு போன்ற பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
மேலும் இ-சிகரெட் பயன்படுத்துவோர் நாளடைவில் புகைப் பழக்கத்திற்கும் அடிமையாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
இதனை அடுத்து இ-சிகரட்டுகளுக்கு தடை விதிக்க போவதாக ஆஸ்திரேலியா அரசு தெரிவித்துள்ளது