டெங்கு மற்றும் இரத்த பரிசோதனைக்கு அதிக கட்டணம் வசூலித்த தனியார் வைத்தியசாலைகள் மீது வழக்கு

டெங்கு பரிசோதனை மற்றும் முழு இரத்த பரிசோதனைக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்ததாக பல தனியார் வைத்தியசாலைகள் மற்றும் ஆய்வக நிலையங்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.
இவற்றில் 2 நிறுவனங்களுக்கு எதிராக ஒதுக்கப்பட்ட வழக்குகளுக்காக மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தலா 14 இலட்சம் ரூபா 10 இலட்சம் ரூபா தண்டப்பணம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய டெங்கு பரவலின் வேகமான வளர்ச்சியுடன், கொழும்பு மாவட்ட நுகர்வோர் அதிகாரசபை பிரிவினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இச'சம்பவங்கள் வெளிவந்ததையடுத்து வழக்கு தொடரப்பட்டது.
இவ்வாறு, கடந்த காலங்களில் டெங்கு பரிசோதனை மற்றும் முழு இரத்த பரிசோதனைக்காக நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்த 12 தனியார் வைத்தியசாலைகள் மற்றும் பரிசோதனை நிலையங்களுக்கு அபராதம் உட்பட 94 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு, நுகேகொடை, மலையக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், ஏறக்குறைய நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ ஆய்வக சோதனைகளுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்யப்படவில்லை என்றும், கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்யப்பட்ட போதிலும், தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வக மையங்கள் இந்த சோதனைகளுக்கு தன்னிச்சையான விலையை வசூலிப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
அந்தத் தகவலைப் பார்க்கும்போது, பொதுவாகப் பயன்படுத்தப்படும் நீரிழிவு, சிறுநீர், ரத்தப் பரிசோதனை போன்றவற்றுக்கு சில விலை வரம்புகள் விதிக்கப்படும் என்று சமீபத்தில் தெரிவிக்கப்பட்டாலும், அதற்கான விதிகள் இன்னும் தயாரிக்கப்படவில்லை என்பது தெரியவந்தது.
மேலும்இ தனியார் மருத்துவமனைகள், ஆய்வக மையங்கள் மூலம் நோயாளிகளை அசௌகரியத்திற்கு உள்ளாக்கி, ஆய்வக சோதனைகளுக்கு கற்பனைக் கட்டணத்தை வசூலித்து, நோயாளிகளின் பணத்தை அபகரிக்கும் மாபியாவை தடுக்க, நோயாளிகளிடம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



