உகாண்டாவின் அமைச்சரான சார்லஸ் எங்கோலா தமது மெய்ப்பாதுகாவலரால் சுட்டுக் கொலை
#world_news
Prabha Praneetha
2 years ago
உகாண்டாவின் அமைச்சரான சார்லஸ் எங்கோலா தமது மெய்ப்பாதுகாவலரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உகாண்டா தலைநகர் கம்பாலாவின் புறநகர் பகுதியில் உள்ள எங்கோலாவின் வீட்டிற்குள் இன்று காலை இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
கொலைக்கான நோக்க தெளிவாக தெரியவில்லை. எனினும், “அமைச்சரிடம் பணிபுரிந்த போதிலும், தனக்கு நீண்ட காலமாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று மெய்ப்பாதுகாவலர் சத்தமிட்டுகொண்டிருந்ததாக சாட்சிகள் கூறுகின்றனர்” என அந்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.