இலங்கையில் மதச் சுதந்திரம் தடைப்பட்டுள்ளது- சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணைக்குழு

#SriLanka
Prabha Praneetha
2 years ago
இலங்கையில் மதச் சுதந்திரம் தடைப்பட்டுள்ளது-  சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணைக்குழு

இலங்கையில் மதச் சுதந்திரம் தடைப்பட்டுள்ளதாக சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 2023 ஆம் ஆண்டிற்கான தனது அறிக்கையை வெளியிட்டுள்ள குறித்த சுயாதீன ஆணைக்குழு, இந்த மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை கவனம் செலுத்த வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளது.

 இலங்கைக்கு மேலதிகமாக ஆப்கானிஸ்தான், இந்தியா, சீனா, நைஜீரியா மற்றும் நிகரகுவா ஆகிய நாடுகளிலும் மத சுதந்திரம் தடைப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இலங்கையில் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் மத சுதந்திரம் மீறப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 சில மதத் தலைவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதேவேளை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசாங்கத்தை மதச் சுதந்திர கறுப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும் அந்த ஆணைக்குழு நான்காவது ஆண்டாக பரிந்துரைத்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!