சாரைப்பாம்பின் சுயசரிதை

#SriLanka
Kanimoli
3 years ago
சாரைப்பாம்பின் சுயசரிதை

என் பெயர் சாரைப் பாம்பு, என்னிடம் கொஞ்சமும் விஷம் கிடையாது. பார்க்கத்தான் பத்தடி நீளம் இருப்பேன் பரபரப்பா இங்குமங்கும் ஓடுவேன். அது எல்லாம் உங்களை தொந்தரவு செய்வதற்காக இல்லை. 

 உங்களின் வயல்வெளிகளில் நெல், கேழ்வரகு, வேர்கடலை போன்ற தானியங்களை கொள்ளை அடிக்கும் எலிகளையும் அதனை போல சிலவற்றையும் பிடிக்கத்தான் . அதனால் விவரம் தெரிந்தவர்கள் என்னை விவசாயிகளின் நண்பன் என்றும் சொல்வார்கள் . 

அதே போல எனக்கும் நல்ல பாம்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அடுத்து வரும் மழைக்காலங்களில் என் சகோதரர்கள் யாராவது உங்கள் இருப்பிடங்களில் தவறி வந்துவிட்டால் வனத்துறையை, தீயணைப்பு துறையை அல்லது பாம்புகளை மீட்கும் தன்னார்வளர்களை அணுகுங்கள். 

அவர்கள், அவசியம் உங்களுக்கு உதவுவார்கள், ஏனெனில் அவர்களை போன்றவர்கள் மட்டுமே எங்களை காப்பாற்றும் எண்ணம் கொண்டவர்கள் நண்பர்களே, நம்புங்கள் நாங்கள் நல்லவர்கள் இயற்கையோடு ஒன்றிவாழும் எங்களை விட்டுவிடுங்கள், உங்களுக்கு நல்லதே செய்வேன்

 இப்படிக்கு 

சாரைபாம்பு

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4