அடுத்த சில வருடங்களில் இலங்கையர் அனைவருக்கும் தங்களுக்கு உரித்தான காணி இருக்கும்!

#SriLanka #Sri Lanka President #Tourist #land
Mayoorikka
2 years ago
அடுத்த சில வருடங்களில் இலங்கையர்  அனைவருக்கும் தங்களுக்கு உரித்தான காணி இருக்கும்!

அடுத்த வருடத்தில் சுற்றுலாத்துறையை அதிக வருமானம் ஈட்டும் துறைகளில் முதலிடத்திற்கு கொண்டு வர வேண்டும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

 அந்த சவாலை நான் ஏற்றுக்கொள்வேன் என காணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

 இன்று வரையில் காணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சினால் 2.5 பில்லியன் வெளிநாட்டு தொழில்வாய்ப்புக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதனால் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதிகள் மட்டுமே நமக்குப் போதுமானதல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 எதிர்கால சந்ததிக்காக நல்லதொரு நாட்டினை உருவாக்க வேண்டும் என்பதே அவரது நோக்கமாகும். அதற்காக அவர் 2048 யும் வெற்றிகொள்வார். இவற்றை நமக்காகவே செய்கிறார். 

இதற்கு ஒரு வருடத்திற்கு முன்னதாக காணப்பட்ட நிலைமையை தலைகீழாக மாற்றியவரும் அவரேயாவார். எதிர்க் கட்சிகளுக்கு ஆர்ப்பாட்டங்களை செய்வது மாத்திரமே நோக்கமாக இருந்தாலும் 2048 அடுத்த சந்ததிக்கான அபிவிருத்தி அடைந்த நாட்டினை உருவாக்குவதே எமது நோக்கமாகும்.

 ஐக்கிய தேசிய கட்சியை ஒருவராலும் வீழ்த்த முடியாது. அதனால் அடுத்த ஆறு வருடங்களுக்குள் இந்நாட்டவர் அனைவருக்கும் தங்களுக்கு உரித்தான காணி இருக்கும் என்பதை நான் உறுதியளிக்கிறேன். 

அதற்காக நமது நாட்டின் தொழிலாளர்களை தொழில் முயற்சியாளர்கள் ஆக்க வேண்டியது அவசியமாகும். நாம் இறந்துவிட்டாலும் நமது பிள்ளைகள் வாழ்வர் என்பதால் 2048 ஆம் ஆண்டு இலக்கை வெற்றிகொள்ள முடியும் என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!