கடனை திருப்பிக் கொடுக்காததினால் சிறுமியை மணந்த 40 வயதான நபர்!

#India #wedding #Girl
Mayoorikka
3 years ago
கடனை திருப்பிக் கொடுக்காததினால் சிறுமியை மணந்த 40 வயதான நபர்!

கடனை திருப்பிக் கொடுக்காததினால் 11 வயது சிறுமியை மணந்த 40 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பீகார் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

 இது தொடர்பில் தெரியவருவதாவது, பீகார் மாநிலம் லட்சுமிபூர் கிராமத்தை சேர்ந்த மகேந்திர பாண்டே என்ற 40 வயதான நபர் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு 2 லட்சம் ரூபா கடன் கொடுத்திருக்கிறார். 

இந்த கடனை அந்த பெண் நீண்ட நாட்களாக கொடுக்காமல் இருந்திருக்கிறார். இந்நிலையில் கடனை திருப்பி செலுத்தாததால் அந்த பெண்ணின் 11 வயது மகளை அவர் திருமணம் செய்துக் கொண்டார். 

 அவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி இருக்கிறார். தனது 11 வயது மகளை கட்டாயப்படுத்தி திருமணம் செய்தது தொடர்பாக அந்த பெண் பொலிஸில் புகார் அளித்தார். மகேந்திர பாண்டே மீது போக்சோ சட்டத்தின் கீழ் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4