மே தின பேரணிக்கு வரும் மக்கள் வீதிகளை மறித்து கவனக்குறைவாக நிறுத்தும் வாகனங்களை இழுத்துச் செல்ல பொலிஸார் நடவடிக்கை

#SriLanka
Kanimoli
2 years ago
மே தின பேரணிக்கு வரும் மக்கள் வீதிகளை மறித்து கவனக்குறைவாக நிறுத்தும் வாகனங்களை இழுத்துச் செல்ல பொலிஸார் நடவடிக்கை

மே தின பேரணிக்கு வரும் மக்கள், வீதிகளை மறித்து கவனக்குறைவாக நிறுத்தும் வாகனங்களை இழுத்துச் செல்ல பொலிஸார் நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

 பொதுமக்கள் கூட்டங்களுக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கும் வரும் வாகனங்களை நடைபாதையில் நிறுத்த வேண்டாம். நடைபாதைகளில் சாலையை அடைக்கும் வகையில் வாகனங்களை நிறுத்தினால் அந்த வாகனங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

 இதுபோன்ற சந்தர்ப்பங்களில், கட்டணம் செலுத்தப்பட வேண்டும். எனவே சாரதிகள் வீதியை மறிக்கும் வகையில் கவனக்குறைவாக வாகனங்களை நிறுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம்.

 மே தின பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் கொழும்பு, கண்டி மற்றும் ஏனைய பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தை கையாள்வதற்காக சுமார் 3,500 பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!