சிறப்புமிக்க புனித ஸ்கொட்டிஷ் கல் லண்டனுக்கு எடுத்து செல்லப்படுகிறது...

#people #world_news #Tamil #England
Prabha Praneetha
3 years ago
சிறப்புமிக்க புனித ஸ்கொட்டிஷ் கல் லண்டனுக்கு எடுத்து செல்லப்படுகிறது...

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழாவிற்காக, ஸ்கொட்லாந்தில் இருந்து வரலாற்று சிறப்புமிக்க புனித ஸ்கொட்டிஷ் கல் லண்டனுக்கு எடுத்து செல்லப்படுகிறது.

 விதியின் கல் என அழைக்கப்படும் இந்த கல் பண்டைய ஸ்கொட்லாந்தின் இறையாண்மையின் சின்னமாக பார்க்கப்படுகிறது.

 152 கிலோ எடையுள்ள இந்தக் கல், 1296ம் ஆண்டு அப்போதைய மன்னராக இருந்த முதலாம் எட்வர்ட் ஸ்கொட்லாந்திடமிருந்து கைப்பற்றினார்.

 மே 6ஆம் திகதி வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழா நடைபெறவுள்ளது.

 எடின்பெர்க் கோட்டையில் வைக்கப்பட்டிருந்த இந்தக் கல், கடந்த 27 ஆண்டுகளில் முதன்முறையாக அங்கிருந்து லண்டனுக்கு பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4