நாட்டில் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணி

#SriLanka #Sri Lanka President #Ranil wickremesinghe #Lanka4 #Tamilnews
Prathees
2 years ago
நாட்டில் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணி

நாட்டில் செயற்கை நுண்ணறிவு பாவனையை ஊக்குவிப்பதற்காக ஜனாதிபதி செயலணியொன்றை ஸ்தாபிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

அதற்கமைவாக, துறைசார் நிபுணர்கள் குழுவொன்றின் பெயரிலான பணிக்குழுவை பெயரிட்டு அவர்களின் தகவல்களை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி, தொழில்நுட்ப அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நாட்டின் அபிவிருத்திக்கு செயற்கை நுண்ணறிவு அல்லது AI தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

விவசாயம், கல்வி, சுகாதாரம், மீன்பிடி, கைத்தொழில் உள்ளிட்ட பல துறைகளில் எதிர்கால அபிவிருத்திக்காக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

மொத்த தேசிய வருமானத்தில் இலங்கையின் கணனி தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழிநுட்பத்தின் வருடாந்த பங்களிப்பு 1.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என இங்கு தெரிவிக்கப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!