விமான நிலையத்தில் 22 பாம்புகளுடன் பெண் ஒருவர் கைது!
#SriLanka
#Arrest
#Tamil People
#Lanka4
Prabha Praneetha
2 years ago
பல்வேறு வகையான 22 பாம்புகளுடன் பெண் ஒருவரை சென்னை விமான நிலையத்தில் இந்திய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ஏ.கே.13 என்ற விமானம் மூலம் கோலாலம்பூரில் இருந்து கடந்த 28ஆம் திகதி சென்னை விமான நிலையத்துக்கு குறித்த பெண் வந்துள்ளார். சந்தேகத்தின் அடிப்படையில் அவரை சுங்க அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
அவரது பயணப்பொதிகளை சோதனையிட்டபோது, ஒரு பச்சோந்தியுடன் பல்வேறு வகையான 22 பாம்புகள் காணப்பட்டன.
குறித்த பெண், சனிக்கிழமை உள்ளூர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, 14 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.