இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் மரணம்

#Death #Accident #Indonesia #Boat
Prasu
3 years ago
இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் மரணம்

இந்தோனேசியாவின் மேற்கு மாகாணமான ரியாவில் உள்ள இந்திரகிரி ஹிலிர் என்ற துறைமுக பகுதியில் இருந்து ரியாவ் தீவின் தலைநகரான தஞ்சோங் பினாங்குக்கு பயணிகள் படகு ஒன்று புறப்பட்டது. 

இதில் 80-க்கும் மேற்பட்டவர்கள் சென்று கொண்டிருந்தனர். இந்த படகு புளாவ் புருங் என்ற இடத்துக்கு அருகே உள்ள கடற்பகுதியில் சென்றபோது திடீரென கடலில் கவிழ்ந்தது. 

இதனால் படகில் இருந்தவர்கள் கடலில் விழுந்து தத்தளித்து கொண்டிருந்தனர். இந்த சம்பவம் குறித்து கடலோர போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. 

அதன்பேரில் அவர்கள் மீட்பு படையினருடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு அவர்கள் கடலில் தத்தளித்து கொண்டிருந்த குழந்தைகள், பெண்கள் என 58 பேரை மற்றொரு படகு மூலம் மீட்டனர்.

 ஆனாலும் 11 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் 10 பேர் கடலில் மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி என்ன? என்பது இன்னும் தெரியவில்லை. எனவே பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. எனினும் அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக மீட்பு படையினர் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4