உக்ரைன் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் கலந்துரையாடிய சீன ஜனாதிபதி

#Russia #Ukraine #War #President #world_news #Tamilnews #Lanka4
Prasu
3 years ago
உக்ரைன் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் கலந்துரையாடிய சீன ஜனாதிபதி

ரஷியா- உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக சீனா மத்தியஸ்தம் செய்ய முன்வந்துள்ளது. இதற்காக சமாதான யோசனைகளையும் தெரிவித்துள்ளது. 

கடந்த மாதம் ரஷியாவுக்கு சென்ற சீன அதிபர் ஜி ஜின்பிங், இதுபற்றி பேசி உள்ளார். இந்நிலையில், முதல் முறையாக சீன அதிபர் ஜி ஜின்பிங், இன்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் தொலைபேசியில் பேசினார். 

அப்போது, போர் நிறுத்தம் மற்றும் அரசியல் தீர்வைக் கொண்டுவர மத்தியஸ்தம் செய்வதாக கூறினார். பேச்சுவார்த்தைதான் ஒரே தீர்வு என்று கூறிய அவர், போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு ஒரு சிறப்பு தூதரை அனுப்புவதாகவும் தெரிவித்துள்ளார். 

அணு ஆயுதப் போரினால் யாரும் வெற்றி பெற முடியாது. அணுசக்தி பிரச்சினையில், சம்பந்தப்பட்ட நாடுகள் அமைதியாக இருப்பதுடன், நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். உண்மையிலேயே தங்கள் சொந்த நாட்டின் எதிர்கால நலன் மற்றும் மனிதகுலத்தின் நலன்களுக்காக செயல்பட வேண்டும். நெருக்கடியான சூழ்நிலையை கூட்டாக கையாள வேண்டும் என்றும் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4