சிவாஜியின் நூல் வெளியீட்டில் இந்திய துணைத் தூதுவருக்கு ஆசனம் வழங்காத ஏற்பாட்டாளர்கள்

#function #sivaji ganeshan #nadikar thilagam #India #SriLanka #sri lanka tamil news #Lanka4
Kanimoli
2 years ago
சிவாஜியின் நூல் வெளியீட்டில் இந்திய துணைத் தூதுவருக்கு ஆசனம் வழங்காத ஏற்பாட்டாளர்கள்

யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற சிவாஜி கணேசனின் நூல் வெளியீட்டு விழாவில் யாழ். இந்திய துணை தூதர் ராகேஷ் நடராஜ் ஜெபாஸ்கரனுக்கு ஆசனம் ஒதுக்கப்படவில்லை.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

சிவாஜி கணேசனின் மகன் கலந்து கொண்ட, சிவாஜி கணேசனின் நூல் வெளியீட்டு விழாவுக்கு யாழ். இந்திய துணை தூதரின் பெயர் குறிப்பிடப்பட்டு அழைக்கப்பட்டிருந்தார்.

அதிதிகளுக்கான முன்வரிசை ஆசனம் ஒதுக்கப்பட்ட நிலையில் துணை தூதுவருக்கு எந்தவிதமான ஆசனமும் ஒதுக்கப்படவில்லை.

இந்நிலையில் நிகழ்வுக்கு வந்த துணை தூதர் முன்வரிசை ஆசனம் இல்லாமல் அவதிப்பட்ட நிலையில் யாழ்m பல்கலைக்கழகத் துணை வேந்தர் பேராசிரியர்  சற்குணராஜா தனது இருக்கையை விட்டு எழுந்து அமருமாறு கூறியமையை அவதானிக்க முடிந்தது.

இந்நிலையில் ஊடகவியலாளர்களும் குறித்த நிகழ்வுக்கு அழைக்கப்பட்ட நிலையில் அங்கிருந்த பெண்மணி ஒருவரால் அடையாள அட்டையை காட்டுமாறு கூறியதுடன் இல்லாவிட்டால் அங்கிருந்து வெளியேறுமாறு கூறி அவமானப்படுத்திய சம்பவமும் இடம்பெற்றுமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!