மிதிகம கொலை தொடர்பில் மாத்தறை பொலிஸாரினால் தேடப்பட்டு வரும் மூன்று நபர்கள்

#Police #Crime #Investigation #SriLanka #Lanka4 #sri lanka tamil news
Prathees
2 years ago
மிதிகம கொலை தொடர்பில் மாத்தறை பொலிஸாரினால் தேடப்பட்டு வரும் மூன்று நபர்கள்

கொலை தொடர்பில் தேடப்பட்டு வரும் மூன்று சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை வழங்குமாறு பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 29ஆம் திகதி, மிதிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹோட்டல் ஒன்றின் முன்பாக காரில் வந்த இனந்தெரியாத நபர்களினால் ஹோட்டலின் உரிமையாளர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நால்வரைக் கைது செய்துள்ளதுடன், குற்றத்திற்கு பயன்படுத்திய காரையும் மீட்டுள்ளனர்.

கொலைச் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில் இந்தக் குற்றத்திற்காக வந்த மேலும் மூன்று சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது சந்தேகநபர்கள் பிரதேசத்தை விட்டு வெளியேறியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அவர்களது மூன்று புகைப்படங்களையும் பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

இவர்களை பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் கீழ்கண்ட தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.

உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் - மாத்தறை குற்றப் பிரிவு - 071 8592910

நிலைய கட்டளைத் தளபதி / மாத்தறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு - 071 8596406

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!