காலநிலை தொடர்பான அறிவிப்பு
#SriLanka
#sri lanka tamil news
#weather
#Tamil People
#Tamil
#Tamilnews
Prabha Praneetha
2 years ago

மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இடி மற்றும் மின்னல் தாக்கங்களுடன் மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அதனால் ஏற்படகூடிய பாதிப்பினை தவிர்த்துக்கொள்ள மக்களை அவதானத்துடன் செயற்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.



