இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கண்சொட்டு மருந்து மீளப்பெறுமாற உத்தரவு
#Eye
#Health
#Health Department
#SriLanka
#sri lanka tamil news
#Lanka4
Kanimoli
2 years ago

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ப்ரெட்னி சோலோன் என்ற கண்சொட்டு மருந்து தொகுதியை மாத்திரம் மீளப்பெறுமாறு சுகாதார அமைச்சு அனைத்து மருத்துவமனை பணிப்பாளர்களுக்கும் அறிவித்துள்ளது.
கொழும்பு தேசிய கண் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட மூன்று நோயாளிகள் சிக்கல்களை அனுபவித்ததை அடுத்து, ப்ரெட்னிசோலோன் கண் சொட்டு மருந்தைப் பயன்படுத்துவதில் சிக்கல்கள் எழுந்தன.
இதையடுத்து, இந்த சத்திரசிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படும் அனைத்து உபகரணங்களும் பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
48 மணித்தியாலங்களின் பின்னர் கிடைத்த அறிக்கைக்கு அமைய, நோய்த்தொற்றுக்கு காரணமான மருந்து கண்டறியப்பட்டுள்ளது.



