அக்குரணை முஸ்லிம் பிரதேச பள்ளிவாசல்கள் அனைத்திற்கும் விஷேட பொலீஸ் பாதுகாப்பு

கண்டி பிரதேச உயர் பாதுகாப்பு அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு இணங்க அக்குரணை பிரதேச முஸ்லிம் பிரதேசங்கள் உட்பட பள்ளிவாசல்கள் அனைத்தும் பொலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கிணங்க இன்றோ நாளையோ இரண்டு தினங்களுக்குள் பள்ளிவாசல்களைதாக்குவது குறித்த தகவல் ஒன்றையடுத்து நேற்று மாலை கண்டிப்பிரதேச பொலீஸ் உயர் அதிகாரிகள் அகுரணைப் பள்ளி வாசல்கள் சம்மேளனத்துடன் நடத்திய பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியுள்ளனர்.
இப்பேச்சு வார்த்தைகளின் போது இவ்வாறான தகவல் ஒன்று வெளியாகியுள்ளதால் அக்குரனை முஸ்லிம் பிரதேசங்கள் உட்பட பள்ளிவாசல்கள் அனைத்துக்கும் பொலீஸ் பாதுகாப்பு வழங்குவதாகவும் பள்ளிவாசல் மற்றும் ஊர் பாதுகாப்பு தொடர்பில் பள்ளிவாசல் நிர்வாகங்கள் சுய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறும் வேண்டப்பட்டுள்ளனர்
இத்தகவலுக்கிணங்க அக்குரணைப் பிரதேசத்தில் பொலீஸ் பாதுகாப்புகளுக்கு மேலதிகமாக பள்ளிவாசல் நிர்வாகங்கள் உள்ளகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளன
இவ்விடயமாக அக்குரணை பள்ளிவாசல்கள் சம்மேளனங்களின் தலைவர் சட்டத்தரணி அஸ்மி பாருக் சமூக வலைத்தளங்களின் ஊடாக குரல் ஒலிப்பதிவு ஒன்றின் மூலம் தகவல் அனுப்பியுள்ளதோடு தத்தமது பிரதேசங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள அவ்வப் பகுதி பள்ளிவாசல் நிர்வாகங்கள் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்



