2023ஆம் ஆண்டி ன் முதல் சூரிய கிரகணம் இன்று!

150 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த அரிய நிகழ்வு அவுஸ்திரேலியாவில் இன்று இடம்பெறவுள்ளது.
2023ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று (20) நிகழவுள்ளது. இந்த சூரிய கிரகணமானது காலை 07.04 மணிக்கு தொடங்கி, மதியம் 12.29 மணி வரை நிகழும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மே 5ஆம் தேதி நிகழும் என்பதுடன், இது சூரிய கிரகணம் நிகழ்ந்து 15 நாட்களுக்குப் பின்னர் ஏற்படவுள்ளது.
மே 5ஆம் திகதி இரவு 8.45 மணிக்கு ஆரம்பமாகும் சந்திரகிரகணம் அதிகாலை 1 மணிக்கு முடிவடைய உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்த ஆண்டின் 2ஆவது சூரிய கிரகணம் ஒக்டோபர் 14ஆம் திகதி நிகழும் அதேவேளை, மேற்கு ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அட்லாண்டிகா மற்றும் ஆர்க்டிக் பகுதிகளில் புலப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஆண்டின் 4ஆவதும் கடைசியுமான சந்திர கிரகணம் ஒக்டோபர் 29ஆம் அதிகாலை 1.06 மணிக்கு ஆரம்பமாகி 2.22 மணிக்கு முடிவடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக கங்கன சூரிய கிரகணம், வளைய சூரிய கிரகணம் ஆகியவை அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது.
பூரண கிரகணம் 150 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகிறது. இந்த கிரகணம் குறித்து சுற்றுலா பயணிகள், பொதுமக்களுக்கு விளக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து முதன்மை விஞ்ஞானி எபினேசர் கூறியதாவது:-
இன்று (20 ) நடக்கும் பூரண சூரியகிரகணம் குறித்து அனைத்து தரப்பினரும் அறிந்து கொள்ளும் வகையில் வானியற்பியல் விஞ்ஞானிகள் மூலம் விளக்கம் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 7.30 மணியில் இருந்து 9 மணி வரை சுற்றுலா பயணிகள், பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அடுத்த முழு சூரிய கிரகணம் 2172-ம் ஆண்டுதான் வரும். எனவே பொதுமக்கள் இந்த அரிய நிகழ்வை கண்டு கழிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.



