சீனாவுக்குத் தெரியாமல் இலங்கையிடம் குரங்குகளைக் கேட்ட நிறுவனம் எது?

சீன நிறுவனம் ஒன்றின் கோரிக்கைக்கு அமைய இலங்கையில் இருந்து 100,000 குரங்குகளை வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இலங்கையில் இருந்து குரங்குகளை அழைத்து வருமாறு எந்தவொரு தரப்பினரும் சீன அதிகாரிகளிடம் கோரிக்கையை முன்வைக்கவில்லை என இலங்கைக்கான சீன தூதரகம் நேற்று டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளது.
நிறுவனம் ஒன்றிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கையை குழுவொன்றுக்கு சமர்ப்பித்ததாக
அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இந்த நாட்டில் குரங்குகளின் தொகை 30 லட்சத்தை நெருங்குகிறது.
மேலும், இந்நாட்டில் பயிர் சேதத்தை ஏற்படுத்தும் விலங்குகளில் குரங்குதான் முதன்மையானது.
250 விவசாய அபிவிருத்திப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, 110 பிரதேசங்களில் பயிர்கள் குரங்குகளினால் முற்றாக சேதமடைந்துள்ளன.



