மேல் மாகாணத்தில் அதிகரித்துள்ள மாடு திருட்டு: சொகுசு வாகனங்களில் திருடிச் செல்வதாக குற்றச்சாட்டு

மேல் மாகாணத்தில் தினமும் குறைந்தது ஆறு அல்லது ஏழு மாடுகள் திருடப்படுவதாக விவசாய அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.
குறிப்பாக கம்பஹா மாவட்டத்தில் இந்த நிலைமை வலுவாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விலங்குகள் நாளொன்றுக்கு 15-30 லீற்றர் வரை பால் கொடுக்கும் பசுக்கள் எனவும், கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம் ஒவ்வொரு மாதமும் குறைந்தது 35-40 பசுக்கள் திருடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையில் நடைபெற்ற மாகாணங்களுக்கு இடையிலான விவசாய அதிகாரிகளின் கலந்துரையாடலில், மேல் மாகாணத்தில் அதிகரித்துள்ள மாடு திருட்டு தொடர்பான உண்மைகளை மாகாண விவசாயத் துறை அதிகாரிகள் முன்வைத்துள்ளனர்.
இக்கலந்துரையாடலில், சொகுசு வேன்களில் வருபவர்கள், இரவு நேரங்களில் மாட்டு கொட்டகையில் கட்டி வைத்துள்ள பசுக்கள் கடத்திச் செல்வதும் தெரியவந்தது.
இதன் மூலம் நாட்டின் மற்ற பகுதிகளில் மாடு திருட்டு அதிகரித்து வருவதாக அனைத்து விவசாய அதிகாரிகளும் வலியுறுத்தினர்.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர,
இரவு ரோந்து, வாகன சோதனை அதிகரிப்பு, பசு திருடர்களுக்கு தற்போது வழங்கப்படும் தண்டனை அதிகரிப்பு தொடர்பாக பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருக்கு கடிதம் அனுப்புமாறு இலங்கை பொலிஸாரிடம் கேட்டுக்கொண்டார். அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.



