பண்டிகை காலத்தில் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை தொடர தீர்மானம்!

#SriLanka #Sri Lanka President #Fuel #Festival #Tamilnews #sri lanka tamil news
Mayoorikka
2 years ago
பண்டிகை காலத்தில் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை தொடர தீர்மானம்!

பண்டிகை காலத்தில் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் அளவை எதிர்வரும் ஒரு வாரத்திற்கு அவ்வாறே தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பண்டிகை காலத்தை முன்னிட்டு எரிபொருள் அளவை அதிகரிக்க கடந்த ஏப்ரல் 4 ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிலையில், கியூ ஆர். முறையின் கீழ் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் அளவை எதிர்வரும் ஒரு வாரத்திற்கு தொடர அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

இதற்கமைய, முச்சக்கர வண்டிகளுக்கு 5 லீட்டரில் இருந்து 8 லீட்டராகவும், மோட்டார் சைக்கிள்களுக்கு 4 லீட்டரில் இருந்து 7 லீட்டராகவும், பேருந்துகளுக்கு 40 லீட்டரில் இருந்து 60 லீட்டராகவும், கார்களுக்கு 20 லீட்டரில் இருந்து 30 லீட்டராகவும், லொரிகளுக்கு 50 லீட்டரில் இருந்து 75 லீட்டராகவும், சிறப்பு நோக்க வாகனங்களுக்கு 20 லீட்டரில் இருந்து 30 லீட்டராகவும், வேன்களுக்கு 20 லீட்டரில் இருந்து 30 லீட்டராகவும், land vehicles 15 லீட்டரில் இருந்து 25 லீட்டராகவும், quadric cycle 4 லீட்டரில் இருந்து 6 லீட்டராகவும் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!