திருச்செந்தூர் அருகே இரண்டு இளைஞர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல்

#Tamilnews #Breakingnews #ImportantNews #Tamil Nadu #Tamil People
Mani
2 years ago
திருச்செந்தூர் அருகே இரண்டு இளைஞர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல்

திருச்செந்தூர் பஸ்சில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனால், திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது தூத்துக்குடியில் இருந்து தனியார் பேருந்து ஒன்று வந்தது. அதில் இருந்து இரண்டு இளைஞர்கள் இறங்கினர். அவர்களில் ஒருவர் அட்டைப் பெட்டியை வைத்திருந்தார்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த 2 வாலிபர்களையும் பிடித்து விசாரித்தபோது அவர்கள் தப்பி ஓட முயன்றனர். உடனே போலீசார் மடக்கி பிடித்து அட்டைபெட்டியை சோதனை செய்ததில், அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அந்த வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் தேனி மாவட்டம் சோலை தேவன் பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அபிஷ் என்ற மருது (வயது 22), தென்காசி மாவட்டம் சிவகிரி நேதாஜி சாலை தெருவை சேர்ந்த தங்க மாரியப்பன் (வயது 22) என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!