எக்ஸ்பிரஸ்-பேர்ள் இழப்பீட்டுக்கு பதிலாக 250 மில்லியன் டொலர் லஞ்சமாக வாங்கியுள்ளனர்: நீதி அமைச்சர்

#wijayadasa rajapaksha #Police #Investigation #SriLanka #Lanka4 #sri lanka tamil news
Prathees
2 years ago
எக்ஸ்பிரஸ்-பேர்ள் இழப்பீட்டுக்கு பதிலாக 250 மில்லியன் டொலர்  லஞ்சமாக வாங்கியுள்ளனர்: நீதி அமைச்சர்

2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்s; கப்பலுக்கு சொந்தமான நிறுவனம் இலங்கைக்கு வழங்க வேண்டிய நட்டஈடு தொடர்பில் கலந்துரையாடிய போது சில தரப்பினர் 250 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாக பெற்றுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  

பிரித்தானியாவில் உள்ள வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதாக ஐலண்ட் பத்திரிகையுடன் நடத்திய கலந்துரையாடலில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தகவலை ஆராயுமாறு அகரன் அமைச்சர் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமசிங்கவிற்கு அறிவித்துள்ளார்.

கடல் விபத்தினால் இலங்கையில் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடுகளை பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளை சட்டமா அதிபர் திணைக்களம் தற்போது தயாரித்து வருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!