புஷ்பா படக்குழு வெளியிட்ட போஸ்டர் தொடர்ந்து டிரெண்டாகி வருகிறது.
#Actor
#TamilCinema
Mani
2 years ago
-1-1.jpg)
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில், ஜெகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'புஷ்பா' திரைப்படம் 2021ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இப்படம் தெலுங்கில் தயாரிக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பிற இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூல் செய்தது.
இப்படத்தின் இரண்டாம் பாகமான “புஷ்பா-தி ரூல்” படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில், நடிகர் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் சிறப்பு கிளிம்ப் வீடியோவை படக்குழு வெளியிட்டது.
இந்த வீடியோ தற்போது யூடியூப்பில் ட்ரெண்டிங்கில் உள்ளது மேலும் 64 மில்லியன் பார்வைகளையும் 2.48 மில்லியன் லைக்குகளையும் பெற்றுள்ளது. இதனை படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.



