கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட இளைஞன் குறித்து  வெளியான தகவல்கள்

#Police #Investigation #Investment #SriLanka #Lanka4 #sri lanka tamil news
Prathees
2 years ago
கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட இளைஞன் குறித்து  வெளியான தகவல்கள்

எல்பிட்டிய, அட்கந்துர பிரதேசத்தில் விவசாய நிலம் ஒன்றில் கொல்லப்பட்டு பாதி புதைக்கப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் ஒன்று எல்பிட்டிய பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று (07) பிற்பகல் எல்பிட்டிய பொலிஸ் அதிகாரிகளினால் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

எல்பிட்டிய அட்கந்துர பிரதேசத்தில் வசிக்கும் சாந்தகுமார சரத்குமார என்ற 21 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த வாலிபர் வீட்டை விட்டு வெளியேறினார்.

ஆனால், அவர் வீடு திரும்பாததால், அவரை காணவில்லை என உறவினர்கள் பொலிசில் புகார் அளித்தனர்.

குறித்த இளைஞனின் உற்ற நண்பன் என கூறப்படும் 40 வயதுடைய நபரின் வீட்டில் இருந்து குறித்த இளைஞனின் மோட்டார் சைக்கிளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இளைஞனின் உடல் புதைக்கப்பட்ட குழிக்கு அருகில் அவரது பணப்பையையும் பொலிசார் கண்டுபிடித்தனர்.

உயிரிழந்த இளைஞனின் நெருங்கிய நண்பரே இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் என சந்தேகிக்கின்ற பொலிஸார், அவர் தற்போது தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!