விமான நிலையத்தில் பிடிபட்ட தந்தையையும் மகனையும் நாடு கடத்த நடவடிக்கை!

#SriLanka #Airport #Passport #Department #Tamilnews #sri lanka tamil news #Lanka4
Mayoorikka
2 years ago
விமான நிலையத்தில் பிடிபட்ட தந்தையையும் மகனையும் நாடு கடத்த நடவடிக்கை!

ஐரோப்பாவுக்குத்  தப்பிச் செல்லும் நோக்கில் போலியான டொமினிகன் குடியரசு கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கைக்குள் பிரவேசிக்க முயன்ற ஈராக் இளைஞர் ஒருவரையும் அவரது தந்தையையும் நாடு கடத்த கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

18 வயதான ஈராக் இளைஞர் தனது தந்தையுடன் துபாயிலிருந்து இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இலங்கைக்குள் பிரவேசிப்பதற்காக, கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் உள்ள குடிவரவுத் திணைக்கள கரும பீடத்தில் டொமினிகன் குடியரசு கடவுச்சீட்டு மற்றும் ஏனைய ஆவணங்களை வழங்கியுள்ளார்.

இதன்போதே குறித்த கடவுச்சீட்டு போலியானது என்பது தெரிய வந்ததால் அவர்கள் இருவரையும் நாடு கடத்த தீர்மானிக்கப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!