நடக்கவிருக்கும் மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழாவிற்கு 2 ஆயிரம் பிரபலங்களுக்கு அழைப்பு

#England #KingCharles #function #world_news #Tamilnews #Lanka4
Prasu
3 years ago
நடக்கவிருக்கும் மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழாவிற்கு 2 ஆயிரம் பிரபலங்களுக்கு அழைப்பு

இங்கிலாந்து மகாராணி 2-ம் எலிசபெத் கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து புதிய மன்னராக 3-ம் சார்லஸ் அரியணை ஏறினார். இந்நிலையில் அடுத்த மாதம் (மே) 6-ந்தேதி மன்னர் சார்லசின் முடி சூட்டு விழா நடைபெறும் என்று பக்கிங்காம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

இந்த முடிசூட்டுவிழாவின் போது பாரம்பரிய மரபுப்படி மன்னர் சார்லஸ் கையில் செங்கோல், தடி ஆகியவற்றை ஏந்தி அரியணையில் அமர்வார். 

பின்னர் மூத்த மதகுருமார்களால் புனிதப்படுத்தி ஆசிர்வதிக்கப்பட்டதும் புனித எட்வர்டின் கிரீடம் மன்னர் சார்லசுக்கு சூட்டப்படும்.

இதையடுத்து பக்கிங்காம் அரண்மனையின் பால்கனியில் இருந்து மன்னர் சார்லஸ் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். 

அதே நாளில் இங்கிலாந்து ராணியாக கமீலா பார்க்கர் முறைப்படி அறிவிக்கப்படுவார். இந்த முடிசூட்டு விழாவில் பங்கேற்க இளவரசர் வில்லியம் அவரது மனைவி கேட், மற்றொரு இளவசரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையில் மன்னரின் முடி சூட்டு விழாவுக்கான அழைப்பிதழ்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4