ஜப்பானில் 10 பேருடன் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் மாயம்

#Military #Helicopter #Missing #Japan #world_news #Tamilnews #Lanka4
Prasu
3 years ago
ஜப்பானில் 10 பேருடன் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் மாயம்

ஜப்பானின் தெற்கு பகுதியில் 10 நபர்களுடன் புறப்பட்டுச் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் இன்று மாலையில் காணாமல் போனது. 

UH-60 பிளாக் ஹாக் என்ற ஹெலிகாப்டர், மியாகோ தீவு அருகே சென்றபோது ரேடாரில் இருந்து மறைந்தது. 

இதனால் விபத்தில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஹெலிகாப்டருடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது தொடர்பாக கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து கடலோர காவல் படையின் மீட்புக்குழுவினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நான்கு ரோந்து கப்பல்கள் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4