பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மே 14ம் திகதி தேர்தல் நடத்த நீதிமன்றம் உத்தரவு

#Pakistan #Punjab #District #Election #Election Commission #world_news #Tamilnews #Lanka4
Prasu
3 years ago
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மே 14ம் திகதி தேர்தல் நடத்த நீதிமன்றம் உத்தரவு

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திற்கு மே 14 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. 

முன்னதாக பஞ்சாப் மாகாணத்திற்கு ஏப்ரல் 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும், பஞ்சாப் மாகாண தேர்தலை ஏப்ரல் 11 ஆம் தேதியில் இருந்து அக்டோபர் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்க பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் முடிவு செய்து இருந்தது. 

இந்த முடிவுக்கு அந்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இன்சாஃப் கட்சி சார்பில் தேர்தலை 90 நாட்களுக்குள் நடத்த உத்தரவிட வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கு பாகிஸ்தான் தலைமை நீதிபதி உமர் அடா பாண்டியால் தலைமையிலான மூன்று பேர் கொண்ட அமர்வு விசாரித்து, தேர்தல் தேதி பற்றிய அதிரடி அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. 

அதன்படி ஏற்கனவே பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தேர்தல் ஒத்திவைப்பு அறிவிப்பை அந்நாட்டு உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

அத்துடன் பஞ்சாப் மாகாணத்திற்கு மே 14 ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 

இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் சார்பில் பஞ்சாப் மாகாணத்திற்கான தேர்தல் அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

அதில் பஞ்சாப் மாகாண தேர்தல் மே 14 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4