தென்னிலங்கை நிறுவனங்களால் சுரண்டப்படும் தமிழருடைய பழமைகள்!
#SriLanka
#Vanni
#Mullaitivu
#sri lanka tamil news
#Tamil
#Tamil People
#Lanka4
Mayoorikka
2 years ago

முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் பிரதேசத்தில் உள்ள "வாவெட்டி /கொடிவெட்டி " மலை பிரதேசத்தில் கருங்கற்கள் எடுக்கப்பட்டு தென்னிலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.
குறித்த மலை பிரதேசம் வன்னியை ஆண்ட இறுதி மன்னன் "பண்டாரவன்னியன்" வரலாறுடன் பின்னிப்பிணைந்தது.
அங்கு பழமைவாய்ந்த ஒரு சிறிய இந்து ஆலயமும் உண்டு. அந்த மலைத்தொடர்களை அழித்து - நிலத்தை பிளந்து கருங்கற்கள் எடுக்கப்பட்டு தென்னிலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தென்னிலங்கை நிறுவனம் ஒன்றே இதனை செய்வதாக அங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். இதை தடுத்து நிறுத்த உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்குள்ள மக்கள் தெரிவிகின்றனர்.






