ஆனைக்கோட்டையில் தவறான முடிவெடுத்து குடும்பப்பெண் உயிர்மாய்ப்பு
#Police
#Death
#Arrest
#Jaffna
#Lanka4
Kanimoli
2 years ago

யாழ்ப்பாணம் - ஆனைக்கோட்டை பகுதியில் குடும்பப்பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அதே பகுதியை சேர்ந்த யுவனேசன் விஜயலக்சுமி (வயது 41) என்ற பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
காணிப்பிரச்சனை காரணமாக இவர் விபரீத முடிவெடுத்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.



