டயலாலிசிஸ் செய்து கொண்டிருக்கும் போது திடீர் மரணம்; மருத்துவமனையில் 32 வயது டீச்சர் பரிதாப பலி..!

#Death #Murder #Hospital #Tamilnews #ImportantNews
Mani
3 years ago
டயலாலிசிஸ் செய்து கொண்டிருக்கும் போது திடீர் மரணம்; மருத்துவமனையில் 32 வயது டீச்சர் பரிதாப பலி..!

தூத்துக்குடி மாதாநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் பாலமுருகன். இவருடைய மனைவி பத்மபிரியா தூத்துக்குடியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

32 வயதான பத்மபிரியாவுக்கு சிறுநீரக பிரச்சினை ஏற்பட்டு, நெல்லை சந்திப்பு மதுரை சாலையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று மாலை அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக பத்மபிரியா திடீரென்று இறந்து விட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்த அவரது உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்து, முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பத்மபிரியா உடலை வாங்க மாட்டோம் என்று கூறி கதறி அழுதனர்.

இதை அறிந்த நெல்லை சந்திப்பு போலீஸ் உதவி கமிஷனர் ராஜேசுவரன் மற்றும் போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர். அவர்கள் பத்மபிரியாவின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

டயாலிசிஸ் சிகிச்சைக்கு முன்பு மாலை 4 மணி வரை பத்மபிரியா, குடும்பத்தாரிடம் நன்றாக பேசிக்கொண்டிருந்தார் என்றும் ஆனால் டயாலிசிஸ் சிகிச்சை சரியாக அளிக்கப்படாமல், டாக்டர் மற்றும் ஊழியர்கள் கவனக்குறைவாக செயல்பட்டதால் தான் அவர் இறந்து விட்டார்" என்று குற்றம்சாட்டினர்.

இதையடுத்து போலீஸ் அதிகாரிகள், மருத்துவமனைக்குள் சென்று டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4