IPL Match02 : பஞ்சாப் – கொல்கத்தா ஆட்டம் மழையால் பாதிப்பு, பஞ்சாப் அணி வெற்றி பெற்றதாக அறிவிப்பு

#IPL2023 #IPL #match #Climate #Rain #HeavyRain
Mani
3 years ago
IPL Match02 : பஞ்சாப் – கொல்கத்தா ஆட்டம் மழையால் பாதிப்பு, பஞ்சாப் அணி வெற்றி பெற்றதாக அறிவிப்பு

IPL 2023,

இரண்டாவது நாளான , இன்று அனல் பறக்கும் இரண்டு லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன. அதன்படி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பஞ்சாபில் உள்ள மொஹாலி மைதானத்தில் நடைபெற்று வரும் லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தியது.

இதில் பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது . இதையடுத்து கொல்கத்தா அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் களம் இறங்கினர். இதில் அதிரடியில் மிரட்டிய பிரம்சிம்ரன் சிங் 23 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார் .

இதையடுத்து பனுகா ராஜபக்சே களம் கண்டார் . ஆரம்பம் முதல் அதிரடியில் மிரட்டிய ராஜபக்சே 30 பந்தில் அரைசதம் கடந்து அசத்தினார். அணிக்கு பெரிய ஸ்கோர் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 32 பந்தில் 50 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

இதையடுத்து தவானுடன் ஜித்தேஷ் ஷர்மா ஜோடி சேர்ந்தார். அதிரடியாக ஆடிய ஜித்தேஷ் ஷர்மா 11 பந்தில் 21 ரன் எடுத்த நிலையிலும், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷிகர் தவான் 40 ரன்னிலும் ஆட்டமிழந்தனர் .

இதையடுத்து ஜிம்பாப்வே ஆல்-ரவுண்டர் சிக்கந்தர் ராசா மற்றும் சாம் கர்ரன் ஆகியோர் களம் இறங்கினர். இதில் ராசா 16 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்துள்ளது. இதையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மந்தீப் சிங் மற்றும் ரஹ்மத்துலா குர்பாஸ் ஆகியோர் களம் புகுந்தனர்.

இதில் மந்தீப் 2 ரன், அடுத்து வந்த அனுகுல் ராய் 4 ரன், குர்பாஸ் 22 ரன் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர் . இதையடுத்து வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக இம்பேக் பிளாயராக வெங்கடேஷ் அய்யர் களம் இறங்கினார். இவர் ஒருபுறம் நிலைத்து நின்று ஆட மறுபுறம் இறங்கிய நிதிஷ் ராணா 24 ரன், ரிங்கு சிங் 4 ரன், ரஸல் 35 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆகினர். நிலைத்து நின்று ஆடிய வெங்கடேஷ் அய்யரும் 34 ரன் எடுத்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

கொல்கத்தா அணி 16 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்திருந்த போது திடீரென மழை குறுக்கிட்டது. இதன் காரணமாக ஆட்டம் நிறுத்தி வைக்க்கப்பட்டுள்ளது. மழை முடிந்த பின்னர் ஆட்டம் தொடங்கும் ஒருவேளை மழை தொடர்ந்து பெய்தால் டக்வொர்த் லீவிஸ் முறை கடைபிடிக்கப்படும்.

இந்த டக் வொர்த் லீவிஸ் முறைப்படி கொல்கத்தா அணி 16 ஓவர்களில் 153 ரன்கள் எடுத்திருக்க வேண்டும். ஆனால் அந்த அணி 146 ரன்களே எடுத்துள்ளது. ஒருவேளை ஆட்டம் மறுபடி தொடங்கவில்லை என்றால் 7 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4