கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்ட சூர்யா குடும்பத்தினர்
                                                        #Tamilnews
                                                        #Breakingnews
                                                        #ImportantNews
                                                        #Cinema
                                                        #TamilCinema
                                                    
                                            
                                    Mani
                                    
                            
                                        2 years ago
                                    
                                
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் கடந்த சில ஆண்டுகள் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் தமிழர்களின் தொன்மையான பல பொருள்கள் இங்கு கிடைத்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
கீழடி அருங்காட்சியகத்தை, தனது குடும்பத்தினருடன் நேரில் சென்று பார்வையிட்டார் நடிகர் சூர்யா.
அவர்களை கீழடி அருங்காட்சியகம் அதிகாரிகள் வரவேற்று அவர்களுக்கு அகழாய்வு நடைபெற்று வரும் இடத்தை சுற்றிக் காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அருங்காட்சியக ஊழியர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.