குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணை நடாத்த வேண்டும்!

#SriLanka #Sri Lanka President #Fuel #Police #srilankan politics #Tamilnews #Lanka4
Mayoorikka
2 years ago
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணை நடாத்த வேண்டும்!

கொலன்னாவையில் உள்ள பெட்ரோலியக் கூட்டுத்தாபன முனையத்தில் ஊழியர்களை அச்சுறுத்திய விவகாரத்தில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் மூலம் விசாரணை நடத்துமாறு அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 28 ஆம் திகதி கொலன்னாவையில் உள்ள பெட்ரோலியக் கூட்டுத்தாபன முனையத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிலர் எரிபொருள் விநியோகிக்கும் பாதுகாப்பு வலயத்திற்குள் நுழைந்து ஊழியர்களை அச்சுறுத்தியதாக அமைச்சர் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்களது செயற்பாடுகளால் எரிபொருள் விநியோகத்திற்கு இடையூறு ஏற்பட்டதுடன், எரிபொருள் வரிசைகளும் ஏற்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் ஏற்பட்டுள்ள நட்டத்தை குறித்த நபர்களிடமிருந்தே அறவிடுவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!