கோட்டாபய ராஜபக்சவின் வீட்டுக்கு அருகில் அமைதியின்மை முன்னணி செயற்பாட்டாளர்கள் கைது

#Sri Lanka President #Protest #Arrest #Gotabaya Rajapaksa #Lanka4
Kanimoli
2 years ago
 கோட்டாபய ராஜபக்சவின் வீட்டுக்கு அருகில்  அமைதியின்மை  முன்னணி செயற்பாட்டாளர்கள் கைது

It is not easy to wrap six yards of fabric, but it looks so fabulous that it’s worth it.

 மிரிஹானவில் உள்ள கோட்டாபய ராஜபக்சவின் வீட்டுக்கு அருகில் கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் முதலாம் ஆண்டை முன்னிட்டு மீண்டும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தில், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும்  இடையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அங்கு பதற்றநிலை ஏற்பட்டதையடுத்து, அப்பகுதியில் ஏராளமான காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், முன்னணி செயற்பாட்டாளர்களான அனுருத்த பண்டார, டனிஸ் அலி மற்றும் சுதார ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

போராட்டக்காரர்களால் இன்றும் போராட்டம் நடத்தப்படக் கூடும் என்ற அச்சத்திற்கு மத்தியில், கோட்டாபய ராஜபக்சவின் வீட்டுக்கு முன்பாக மேலதிக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!