இலங்கை கடற்பரப்பை அண்டிய பிரதேசத்தில் நிலநடுக்கம்!

#Earthquake #SriLanka #Batticaloa #Tamilnews #sri lanka tamil news
Mayoorikka
2 years ago
இலங்கை  கடற்பரப்பை அண்டிய பிரதேசத்தில் நிலநடுக்கம்!

பேருவளை அண்டிய கடற்பரப்பில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று மதியம் 1.02 மணியளவில் பேருவளை கடற்கரையிலிருந்து 37 கிலோமீற்றர் தொலைவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 3.7 ஆக பதிவாகியுள்ளதாக பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

பேருவளை பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ள நிலையில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!