சென்னை- கோவை இடையே வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம்

#Vande Bharat train #Chennai #Coimbatore #Tamil Nadu #Tamil Student #Tamil People #Tamilnews
Mani
3 years ago
சென்னை- கோவை இடையே வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம்

தமிழ்நாட்டில் சென்னை - கோவை இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ரயிலை வருகிற 8 ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

இந்த நிலையில் வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது. காலை 5.40 மணிக்கு சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் கிளம்பிய வந்தே பாரத் ரயில் காலை 9.15 மணிக்கு சேலம் ஜங்சன் ரயில் நிலையத்தினை வந்தடைந்தது.

சேலம் ஜங்சனில் 4 வது பிளாட்பாரம் வந்த இந்த ரயிலை கோட்ட மேலாளர் பங்கஜ் குமார் சிங் தலைமையிலான ரயில்வே அதிகாரிகள் இந்த ரயிலை வரவேற்றனர். 

முழுமையான சொகுசு ரயிலாக இயக்கப்படுகிற இந்த ரயில் தான் தமிழ்நாட்டிலேயே இயக்கப்படுகின்ற அதிவேக ரயிலாக இருக்கும். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4