மது குடிக்க பணம் இல்லாததால், தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை கல்லால் அடித்து உடைத்து பணத்தை திருட முயன்ற ஸ்விகி நிறுவன ஊழியர்

#Tamilnews #Breakingnews #ImportantNews #Robbery
Mani
3 years ago
மது குடிக்க பணம் இல்லாததால், தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை கல்லால் அடித்து உடைத்து பணத்தை திருட முயன்ற ஸ்விகி நிறுவன ஊழியர்

சென்னை, கே.கே. நகரில் ஸ்விகி நிறுவன ஊழியர், மது குடிக்க பணம் இல்லாததால் தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை கல்லால் அடித்து உடைத்து பணத்தை திருட முயன்ற காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

நெசப்பாக்கத்தில் தங்கி வேலைசெய்யும் திருவண்ணாமலையை சேர்ந்த அசோக் மதுபோதையில் முனுசாமி சாலையில் உள்ள ஏடிஎம் மையத்தில் இயந்திரத்தை உடைத்துள்ளார்.

வங்கி ஊழியரின் புகாரின்பேரில் சிசிடிவி பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி தனிப்படை போலீசார் அசோக்கை கைது செய்த நிலையில், இயந்திரத்தை உடைத்தபோது அலாரம் அடித்ததால் பணத்தை திருடாமல் பயந்து திரும்பி சென்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஏற்கனவே திருவண்ணாமலை காவல் நிலையத்தில் இரண்டு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4