உதகையில், மே மாதம் 19ஆம் தேதி தொடங்குகிறது 125வது மலர் கண்காட்சி!

#Summer #2023 #Tamilnews #ImportantNews
Mani
3 years ago
உதகையில், மே மாதம் 19ஆம் தேதி தொடங்குகிறது 125வது மலர் கண்காட்சி!

நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா தேதிகள் மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது...

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் மே மாதத்தில் கோடை விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.இந்த நிலையில்,
இந்த ஆண்டு மே மாதம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 125வது மலர் கண்காட்சி மே 19 துவங்கி 23ம் தேதி வரை ஐந்து நாட்கள் நடக்கிறது.

கோடை விழாவின் துவக்கமாக மே மாதம் 6,7 ஆகிய தேதிகளில் கோத்தகிரி நேரு பூங்காவில் 12வது காய்கறி கண்காட்சியும்,
மே 12,13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் கூடலூரில் 10வது வாசனை திரவிய பொருட்கள் கண்காட்சியும்,
மே 13,14,15 ஆகிய தேதிகளில் ஊட்டி ரோஜா பூங்காவில் 18வது ரோஜா கண்காட்சி மற்றும்
கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 125வது மலர் கண்காட்சி மே மாதம் 19ம் தேதி துவங்கி 23ம் தேதி வரை ஐந்து நாட்கள் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நடக்கிறது.

மேலும் மே 27, 28 தேதிகளில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 63வது பழக் கண்காட்சி நடக்க உள்ளதாக
மாவட்ட நிர்வாகம் மூலம் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4