அன்னை போல் ஒரு உறவு இருக்குமா? உதிரம் தந்து உயிரும் தந்து உறவாக வாழும் உன்னதம் அன்னை. - நதுநசி. இன்றைய கவிதை 29-03-2023.
#கவிதை
#அன்னை
#இன்று
#தகவல்
#லங்கா4
#Poems
#Mummy
#today
#information
#Lanka4
Mugunthan Mugunthan
2 years ago
அன்னை போல்
ஒரு உறவு இருக்குமா?
========================
உதிரம் தந்து
உயிரும் தந்து
உறவாக வாழும்
உன்னதம் அன்னை.
அப்பா வழி
அன்பை பெற்று
அணைத்து எமக்கு
அனுப்பிடும் ஆற்றல்.
ஊரும் உறவும்
ஊர்வலம் போல
ஊர்ந்து செல்லும்
ஊமை வாழ்வில்
நுட்பம் எல்லாம்
நுணுக்கமாகத் தான்
நுழைந்து ஊட்டும்
நுண்ணறிவு அன்னை.
தோற்று வீழும் போது
தோல்வி தழுவியும்
தோசம் என ஒரு சாட்டால்
தோல்வி மறைப்பாள்.
மற்றவர் முன்னே
மன்னவர் போல
மண்ணாளும் மகவாக
மணப்பார் என்பாள்.
வாழும் காலம்
வாழை போல
வாசம் வீசும்
வாஞ்சை தருவாள்.
நஞ்சையும் அவள்
நம்பிட நமக்கு
நன்மை ஆக்கும்
நல்வழி தந்திடுவாள்.
ஏற்றம் ஒன்றை
ஏராளமாக பெற்றிட
ஏற்றி வைப்பாள்
ஏணிவிளக்கதை பார்.
........ அன்புடன் நதுநசி.