அன்றை அந்த நாளில்..உடல் புகுந்து வாழும் உயிரால் வையகம் வதைத்து வதைந்து வாழ்கிறேன். - நதுநிசி. இன்றைய கவிதை 27-03-2023
#கவிதை
#இன்று
#தகவல்
#லங்கா4
#Poems
#today
#information
#Lanka4
Mugunthan Mugunthan
2 years ago
அன்றை அந்த நாளில்
========================
உடல் புகுந்து
வாழும் உயிரால்
வையகம் வதைத்து
வதைந்து வாழ்கிறேன்.
இருக்கும் போது
இருக்கிற இரத்தம்
இதைக் கொடுத்து
இன்பம் கொள்கிறேன்.
நீண்ட கொடையிது
நீளும் தொண்டுமிது.
கண்டுமிங்கே எனை
தடுத்ததும் உண்டு.
என்னில் இருக்குமோ
அப்போ நல்ல அக்கறை.
இருந்தால் காணட்டும்
இச்செயலை ஊக்குவிக்க.
உளமாற ஒரு ஆறல்
உள்ளம் தேறும் போது
பெரு மகிழ்வு தோன்றும்.
அந்த ஒன்று போதுமே!
உன்னைத் தேடி வந்து
நாலு வார்த்தை பேசும்
அந்த சுகம் காண்பேன்
அன்றை நாளில் நானும்.
......... அன்புடன் நதுநசி.