திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப்ரல் மாதத்திற்கான ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியிடப்படுகின்றன

#Thirumal #Tamilnews #God #Temple
Mani
3 years ago
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப்ரல் மாதத்திற்கான ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியிடப்படுகின்றன

திருப்பதி  ஏழுமலையான் கோயிலில் தேவஸ்தானம் சார்பில் மாதந்தோறும் ரூ.300 ஆன்லைன் தரிசன கட்டண டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது. அதன்படி ஏப்ரல் மாதத்திற்கான ரூ.300 மதிப்புள்ள தரிசன டிக்கெட்டுகள் இன்று ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

திருப்பதி ஏழுமலையானை பக்தர்களுக்கு  தரிசிக்க வசதியாக ஏப்ரல் மாதத்திற்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளதாக திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதத்திற்கான ஆன்லைன் சலுகையாக திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் இணையதளத்தில் இன்று தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படும். டிக்கெட்டுகளை ரூ.300 விலையில் வாங்கலாம்.

https://tirupatibalaji.ap.gov.in/#/login என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. முதலில் முன்பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இந்த டிக்கெட்டுகள் வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4