யாழ். அராலி பாலத்தடியில் விபத்து: இளம் குடும்பஸ்தர் படுகாயம்!

#SriLanka #Jaffna #Accident #Hospital #Police #Tamilnews #sri lanka tamil news #Lanka4
Mayoorikka
2 years ago
யாழ். அராலி பாலத்தடியில் விபத்து: இளம் குடும்பஸ்தர் படுகாயம்!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பாலத்தடியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒரு பிள்ளையின் தந்தை படுகாயமடைந்துள்ளார்.

அராலி மத்தி, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் நிக்சன் (வயது 27) என்பவரே குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளார்.

இவர் காலையில் வேலைக்கு சென்றுகொண்டிருந்தவேளை அராலி முத்துமாரி அம்மன் கோவில் வீதியால், அராலி -  யாழ்ப்பாணம் பிரதான வீதிக்குள் நுழைய முற்பட்டார், இதன்போது யாழ்ப்பாணத்தில் இருந்து, யாழ்ப்பாணம் - அராலி பிரதான வீதியூடாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்து சம்பவித்துள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த நபர் 1990 இலக்க அவசர நோயாளர் காவு வண்டி மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

accident
accident
accident
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!