திருப்பதி ஏழுமலையான் கோயில்: தரிசன டிக்கெட் வெளியீட்டு தேதி அறிவிப்பு

#Tamilnews #Breakingnews #ImportantNews
Mani
3 years ago
திருப்பதி ஏழுமலையான் கோயில்: தரிசன டிக்கெட் வெளியீட்டு தேதி அறிவிப்பு

ஆந்திர மாநிலத்தில் திருப்பதி திருமலையில் எழுந்தருளியுள்ள ஏழுமலையான் திருக்கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். இந்தக் கோயிலுக்கு விஐபி தரிசனம், 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசனம், இலவச தரிசனம் என  பல்வேறு வகையான ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்துள்ளது.

இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப்ரல் மாதம் வழிபாடு நடத்துவதற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் மார்ச் மாதம்  27ஆம் தேதி காலை 11 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

ரூ.300 தரிசன டிக்கெட்டுகளை பெற விரும்பும் பக்தர்கள் தேவஸ்தான இணையதளம் https://tirupatibalaji.ap.gov.in/#/login மூலம் டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தேவஸ்தானம் அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4