வணிக மற்றும் சுற்றுலா விசாவில் அமெரிக்காவுக்கு பயணிக்கும் நபர் வேலைகளுக்கு விண்ணப்பிக்க அனுமதி

#America #Visa #work #Student #world_news #Tamilnews #Lanka4
Prasu
3 years ago
வணிக மற்றும் சுற்றுலா விசாவில் அமெரிக்காவுக்கு பயணிக்கும் நபர் வேலைகளுக்கு விண்ணப்பிக்க அனுமதி

அமெரிக்காவுக்கு செல்லும் வெளிநாட்டவர்களுக்கு பல்வேறு விசாக்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் எச்1பி விசாவில் இந்தியர்கள் உள்பட ஏராளமான வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். 

மேலும் சுற்றுலா விசா, வணிக விசாவில் ஏராளமானோர் அமெரிக்காவுக்கு சென்று வருகிறார்கள். இவர்கள் குறிப்பிட்ட காலம் வரைதான் அங்கு இருக்க முடியும். 

இதே போன்ற விசாவில் அமெரிக்காவுக்கு செல்பவர்கள் பணிபுரிய அனுமதி இல்லாமல் இருந்தது. இந்நிலையில் அமெரிக்க விசாவில் புதிய நடைமுறை கொண்டு வரப்படுகிறது. 

வணிக மற்றும் சுற்றுலா விசாவில் அமெரிக்காவுக்கு பயணிக்கும் தனிநபர், வேலைகளுக்கு விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தற்காலிக விசாவில் அமெரிக்காவில் இருந்தும் அவர்கள் பணிபுரிவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் புதிய வேலை வாய்ப்பை தொடங்கும் முன் பி1 (வணிகம்) மற்றும் பி2 (சுற்றுலா) விசாவை வேலைவாய்ப்பு அங்கீகரிக்கப்பட்ட நிலைக்கு மாற்றுவதற்கான மனு மற்றும் கோரிக்கை அளித்து அனுமதி பெற வேண்டும். 

விசாவின் நிலையை மாற்றும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் அந்த நபர் அமெரிக்காவை விட்டு வெளியேறி பின்னர் புதிய வேலை வாய்ப்பை பெறுவதற்கான அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4