போரில் உயிரிழந்த வீரர்களுக்கு ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அஞ்சலி

#Russia #War #Ukraine #Soldiers #Death #world_news #Tamilnews #Lanka4
Prasu
3 years ago
போரில் உயிரிழந்த வீரர்களுக்கு ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அஞ்சலி

உக்ரைன் ரஷ்யா போரானது ஒரு வருடத்தை கடந்து தொடர்ந்து நீடித்து வருகின்றது. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுத மற்றும் பொருளாதார உதவிகளை செய்து வருகின்றது. 

இதனால் இப்போர் நின்று விடாமல் தொடர்ந்து நீடித்துக் கொண்டே செல்கின்றது. மேலும் அந்நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளது. 

ஆனால் இதனை ரஷ்யா கண்டு கொள்ளாமல் போரில் முன்னேறி செல்வதையே நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த நிலையில் ரஷ்யாவிற்கு எதிரான போரில் உயிர்த்தியாகம் செய்த உக்ரைன் வீரர்களுக்கு அந்நாட்டின் அதிபர் ஜெலென்ஸ்கி அஞ்சலி செலுத்தியுள்ளர். 

அதன்பின் அவர் மோஷ்சுன் பகுதியில் கூடியிருந்த ராணுவ வீரர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார். அப்போது அவர் போரில் ஈடுபட்ட உக்ரேனிய வீரர்களை பாராட்டினார். 

இதனை அடுத்து உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி புதிதாக அமைக்கப்பட்ட நினைவிடத்தில் போரில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு விருதுகளை வழங்கினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4