திமுக நிர்வாகிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக கண்டித்துள்ளார்.

#Tamil Nadu #Tamilnews #ChiefMinister
Mani
3 years ago
திமுக நிர்வாகிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக கண்டித்துள்ளார்.

திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா வித்யாலயா கலைஞர் அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா, நாடாளுமன்ற தேர்தல் பணிகள் உள்ளிட்ட பல முக்கிய நிகழ்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் பல முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகளைத் தொடங்க வேண்டும் என்றும், விரைவில் தொகுதி வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தலைமையை மீறி சில கேவலமான செயல்களை செய்வதாக திமுக நிர்வாகிகளை முதல்வர் கண்டித்தார். மேலும், திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மீது கட்சிக்கு கெட்ட பெயர் வராத வகையில் மாவட்டச் செயலாளர்கள் அக்கறையுடன் செயல்பட வேண்டும் என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4