கனேடிய பாடசாலை ஒன்றில் மாணவர் ஒருவர் ஆசிரியர் இருவரை கத்தியால் குத்தியுள்ளார்.

#world_news #Canada #School Student
Mani
3 years ago
கனேடிய பாடசாலை ஒன்றில் மாணவர் ஒருவர் ஆசிரியர் இருவரை கத்தியால் குத்தியுள்ளார்.

கனடாவின் நோவா ஸ்கோடியா மாகாணத்தில் உள்ள ஹாலிஃபாக்ஸ் நகரில் உள்ள பள்ளி நேற்று வழக்கம் போல் இயங்கி வந்தது. அப்போது, ​​ஒரு வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, ​​மாணவர் ஒருவர் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆசிரியரை சரமாரியாக குத்தினார். பயந்துபோன மாணவர்கள் கூச்சலிட்டபடி அங்கும் இங்கும் ஓட ஆரம்பித்தனர்.

இதையடுத்து அருகில் இருந்த வகுப்பறையில் இருந்த ஆசிரியர் வந்து மாணவனை தடுக்க முயன்றார். அப்போது, ​​அவரையும் அந்த மாணவன் கத்தியால் குத்தினான். மேலும், இந்த சம்பவத்தில் தாக்கப்பட்ட மாணவனுக்கும் கத்திக்குத்து காயம் ஏற்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து பள்ளிக்கு வந்தனர். காயமடைந்த மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4